Monday, June 29, 2015

01.01 - இடைமருதூர் (திருவிடைமருதூர்)

01.01 - இடைமருதூர் - (திருவிடைமருதூர்

Verses & Meaning in English  - please see bottom half of this page.


2007-10-27 

திருவிடைமருதூர்
------------------------------------------------------
(
வஞ்சி விருத்தம்: "விளம் விளம் விளங்காய்" - வாய்பாடு)
(
சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.112.1 - "இன்குர லிசைகெழும் யாழ்முரலத்")

1)

சனியொடு வினைகளும் தருதுயர்கள்
பனியெனப் பறந்திடப் பணிமனமே
கனிமொழி யாள்இடம் கலந்திருக்கும்
இனியவன் உறைபதி இடைமருதே.


(கனிமொழியாள் - வினைத்தொகை - இனிக்கும் மொழி உடைய பார்வதி;
கலத்தல் - சேர்ந்திருத்தல்
உறை பதி - உறைகின்ற தலம்)
உரைநடை:  மனமே! சனியொடு வினைகளும் தரு துயர்கள் பனி எனப் பறந்திட, கனி மொழியாள் இடம் கலந்(து) இருக்கும்
இனியவன் உறை பதி இடைமருதே பணி!

2)
குறைமிகு பிறவிகள் கொடுவினைபோய்ப்
பறைந்திட அனுதினம் பணிமனமே
மறைபல மொழிகிற மதியணியும்
இறையவன் உறைபதி இடைமருதே.


(குறை மிகு பிறவிகள் கொடு வினை - குற்றம் குறைகள் மிகுந்து இருக்கும் (இத்தகைய) பிறவிகளைக் கொடுக்கும் வினைகள்; (--அல்லது-- குற்றம் குறைகள் மிகுந்து இருக்கும் (இத்தகைய) பிறவிகளும் கொடிய வினைகளும் -- 'உம்' தொக்கு நிற்பதாகக் கொண்டால்);
பறைதல் - அழிதல்;
மறை - வேதம்;)
உரைநடை:  மனமே! குறை மிகு பிறவிகள் கொடு வினை போய்ப் பறைந்திட, மறை பல மொழிகிற, மதி அணியும்
இறையவன் உறை பதி இடைமருதே அனுதினம் பணி!

3)
உடல்எனும் களந்தனில் உளபடைகள்
படபடத் தோடிடப் பணிமனமே
அடல்விடை உடையவன் அணிஉமையாள்
இடமுறை இறையுறை இடைமருதே.


(களம் - போர்க்களம்; இடம்;
படைகள் - இங்கே ஐம்புலன்கள்;
படபடத்து ஓடுதல் - அஞ்சி ஓடுதல்;
அடல் விடை - வலிமை உடைய எருது;
அணி உமையாள் இடம் உறை - அழகிய பார்வதி இடப்பக்கம் இருக்கும்;
இறை - இறைவன்;)
உரைநடைமனமே! உடல் எனும் களம்தனில் உள படைகள் படபடத்(து) ஓடிட,அடல் விடை உடையவன், அணி உமையாள் இடம் உறை இறை உறை இடைமருதே பணி!

4)
உயிரொடு தொடர்வினை உனைஅகலும்
துயிலெழக் கனவென! தொழுமனமே
கயிலையில் இமையவர் கழல்தொழ,மூ
எயிலெரி இறையுறை இடைமருதே.


(தொடர்வினை - தொடர்கிற வினைகள்;
துயில் எழுதல் - உறக்கத்திலிருந்து விழித்தல்;
இமையவர் - தேவர்கள்;
மூ எயில் - முப்புரங்கள்;)
உரைநடைமனமே! கயிலையில் இமையவர் கழல் தொழ, மூ எயில் எரி இறை உறை இடைமருதே தொழு!துயில் எழக் கன(வு) என, உயிரொடு தொடர் வினை உனை அகலும்!

5)
எருமையின் மிசைவரும் எமன்அணுகான்
அருவினை அவைகெடும் அடைமனமே
பெருநதி அரவொடு பிறையணிந்தே
எருதினில் வருமிறை இடைமருதே.


(மிசை - மேல்;
பெரு நதி - இங்கே கங்கை;
அரவு -பாம்பு;
எருது - காளை;)
உரைநடைமனமே! பெரு நதி அரவொடு பிறை அணிந்தே எருதினில் வரும் இறை இடைமருதே அடை!எருமையின் மிசை வரும் எமன் அணுகான்; அருவினை அவை கெடும்!

6)
ஆற்றினில் மணல்என அடைபிறப்பில்
ஆற்றிய வினைஅற அடைமனமே
கூற்றுவன் விழஉதை குரைகழலான்
ஏற்றினில் வருமிறை இடைமருதே.


(ஆற்றினில் மணல் என அடை பிறப்பில் - ஆற்றில் மணல் போல கணக்கு இல்லாத அடைந்த பிறவிகளில்;
ஆற்றிய வினை அற - செய்த தீவினைகள் அற்றுப்போக;
கூற்றுவன் விழ உதை குரை கழலான் - எமன் மாள உதைத்த ஒலிக்கும் கழல் அணிந்த திருவடி உடையவன்;
ஏற்றினில் வரும் இறை இடைமருதே அடை மனமே - காளையின்மேல் வரும் இறைவன் ஆகிய சிவன் உறையும் திருவிடைமருதூரை மனமே அடைவாயாக!
)


7)
பொரிஎரி எனவரும் புலன்களுடன்
புரிவினை பொசுங்கிடப் புகுமனமே
திரிகிற மதில்களைச் சிறுநகையால்
எரியிறை உறைபதி இடைமருதே.


(பொரிஎரி - பொரிக்கும் தீ;
புரிவினை - புரிந்த வினைகள்; ('உம்' தொக்கு நிற்கிறது);
புகுதல் - அடைதல்;
எரி இறை - எரித்த இறைவன்;
பொரி எரி என வரும் புலன்களுடன், புரி வினை பொசுங்கிட - வறுக்கும் நெருப்பைப் போல வருகிற ஐம்புலன்களும், (முன்) புரிந்த வினைகளும் எரிந்து இல்லாமல் போக;
திரிகிற மதில்களைச் சிறு நகையால் எரி இறை உறை பதி இடைமருதே புகு மனமே - விண்ணில் திரிந்த முப்புரங்களைப் புன்னகையால் எரித்த இறைவன் ஆகிய சிவன் உறையும் தலமாகிய திருவிடைமருதூரை அடை மனமே!

8)
புரிகுழல் கயல்விழித் தெரிவையர்பின்
திரிகிற நிலைகெடச் சேர்மனமே
அரிஅவன் அகழ்ந்தடி அடையகிலா
எரியென உயர்இறை இடைமருதே



(புரி குழல் கயல் விழித் தெரிவையர் பின் திரிகிற நிலை கெட - சுருண்ட மயிர் உடைய, கயல் மீன் போன்ற விழிகள் உடைய பெண்கள் பின் செல்கிற நிலைமை அழிய;
அரி அவன் அகழ்ந்(து) அடி அடைய கி[ல்]லா - விஷ்ணு (நிலத்தை) அகழ்ந்தும் அடைய இயலாத;
எரி என உயர் இறை இடைமருதே சேர் மனமே - நெருப்பாக உயர்ந்த இறைவன் ஆகிய சிவன் உறையும் திருவிடைமருதூரை மனமே அடைவாயாக!
)


9)
குமைமுனை வினைகெடக் குறைவிலதோர்
அமைதியும் நிலைபெற அடைமனமே
தமையெரி விடம்தனைத் தடுத்தருள
இமையவர் தொழுமிறை இடைமருதே.


குமைத்தல் - வருத்துதல்;

(
குமை முனை வினை கெட - வருத்துகிற முன்னை வினை அழிய
குறை(வு) இல(து) ஓர் அமைதியும் நிலைபெற - குறைவே இல்லாத ஓர் அமைதி என்றும் நிலவ;
தமை எரி விடம்தனைத் தடுத்(து) அருள - தங்களை எரிக்கிற (பாற்கடலிலிருந்து எழுந்த) விடத்தைத் தடுத்து அருள்வாயாக என்று;
இமையவர் தொழும் இறை இடைமருதே அடை மனமே - தேவர்கள் தொழுகிற இறைவன் ஆகிய சிவன் உறையும் திருவிடைமருதூரை மனமே அடைவாயாக!
)


10)
அறவழி அறிகிலர் அவர்மொழியும்
புறவழி பொருளல அறிமனமே!
பிறவழி ஒருவழி பிறையணியும்
இறைவழி எனஅடை இடைமருதே!


அறம் - தகுதியானது; தர்மம்; ஞானம்;
புறம் - அன்னியம்; வெளியிடம்;
பொருள் - மெய்ம்மை;
பிறவு - பிறவி;
ஒரு - ஒப்பற்ற (unique; special);
அற வழி அறி கி[ல்]லர் - சரியான வழியை அறியாதவர்
அவர் மொழியும் புற வழி பொருள் அ[ல்] - அவர்கள் சொல்லும் அன்னிய வழிகள் மெய்ம்மை அல்ல!
அறி மனமே - மனமே! அறிவாயாக!
பிற(வு) அழி ஒரு வழி பிறை அணியும் இறை வழி என அடை இடைமருதே - பிறவியை அழிக்கும் ஒப்பற்ற வழி, பிறைச் சந்திரனை அணியும் இறைவன் ஆகிய சிவன் வழி என்று திருவிடைமருதூரை அடைவாயாக!

11)
கனைகடல் அலையெனக் கடுத்துவரும்
வினைகெட அடைந்திட விரைமனமே
அனல்வடி வினில்அரி அயனறியார்
எனவரும் இறையுறை இடைமருதே.


(கனை கடல் அலை எனக் கடுத்து வரும் வினை கெட - பேரொலியோடு (இடைவிடாது) வரும் கடல் அலை போல வேகமாக ஓடி வருகிற வினை அழிய;
அனல் வடிவினில் அரி அயன் அறியார் என வரும் இறை - நெருப்பு வடிவத்தில், விஷ்ணுவும் பிரமனும் அறியாதவர் என வருகிற இறைவன் ஆகிய சிவன்;
உறை இடைமருதே அடைந்திட விரை மனமே - உறைகிற திருவிடைமருதூர் அடைய மனமே விரைவாயாக!
)


அன்புடன்,

வி. சுப்பிரமணியன்
=========================

 madisūḍi tudipāḍi - padigam 1.1 - iḍaimarudūr - (tiruviḍaimarudūr)

---------------------------------

(tanadana tanadana tanadananā - Rhythm)

(sambandar tēvāram - tirumuṟai 1.112.1 - "in-kural isai-keḻum yāḻmuralat")


1)

சனியொடு வினைகளும் தரு துயர்கள்

பனி எனப் பறந்திடப் பணி மனமே

கனி-மொழியாள் இடம் கலந்திருக்கும்

இனியவன் உறை பதி இடைமருதே.


saniyoḍu vinaigaḷum taru tuyargaḷ

pani enap paṟandiḍap paṇi manamē

kani-moḻiyāḷ iḍam kalandirukkum

iniyavan uṟai padi iḍaimarudē.


Siva has sweet-voiced Uma as His one half. O mind! Worship Siva dwelling in Thiruvidaimarudur and all your troubles (caused by Navagrahas and your past karma) will vanish like fog in the sun.


2)

குறை-மிகு பிறவிகள் கொடு வினைபோய்ப்

பறைந்திட அனுதினம் பணி மனமே

மறை பல மொழிகிற மதி அணியும்

இறையவன் உறை பதி இடைமருதே.


kuṟai-migu piṟavigaḷ koḍu vinaibōyp

paṟaindiḍa anudinam paṇi manamē

maṟai pala moḻigiṟa madi aṇiyum

iṟaiyavan uṟai padi iḍaimarudē.


Siva sings the Vedas and wears a crescent moon. O mind! Worship daily Lord Siva dwelling in Thiruvidaimarudur and all your karma that (that causes the misery of many future births) will be destroyed.


3)

உடல் எனும் களந்தனில் உள-படைகள்

படபடத் தோடிடப் பணி-மனமே

அடல்-விடை உடையவன் அணி-உமையாள்

இடம்-உறை இறை உறை இடைமருதே.


uḍal enum kaḷandanil uḷa-paḍaigaḷ

paḍabaḍat tōḍiḍap paṇi-manamē

aḍal-viḍai uḍaiyavan aṇi-umaiyāḷ

iḍam-uṟai iṟai uṟai iḍaimarudē.


Siva rides a strong victorious bull and has the beautiful Uma as His one half. O mind! Worship Siva dwelling in Thiruvidaimarudur and the hostile army of five senses in this body (that attack you all the time) will flee.


4)

உயிரொடு தொடர் வினை உனை அகலும்

துயில் எழக் கனவென! தொழு மனமே,

கயிலையில் இமையவர் கழல் தொழ, மூ

எயில் எரி இறை உறை இடைமருதே.


uyiroḍu toḍar vinai unai agalum

tuyil eḻak kanavena! toḻu manamē,

kayilaiyil imaiyavar kaḻal toḻa, mū

eyil eri iṟai uṟai iḍaimarudē.


Siva burnt down the three forts when Devas prayed to Him. O mind! Worship Siva dwelling in Thiruvidaimarudur and the karma that follows your soul will go away like a dream upon waking up.


5)

எருமையின் மிசை வரும் எமன் அணுகான்

அருவினை அவை கெடும் அடை மனமே

பெரு-நதி அரவொடு பிறை அணிந்தே

எருதினில் வரும் இறை இடைமருதே.


erumaiyin misai varum eman aṇugān

aruvinai avai keḍum aḍai manamē

peru-nadi aravoḍu piṟai aṇindē

erudinil varum iṟai iḍaimarudē.


Siva wears the Ganga river, a snake, and the crescent moon and rides on a bull. O mind! Worship Siva dwelling in Thiruvidaimarudur and Yama (who rides on a buffalo) will not come near us and our terrible karma will be destroyed.


6)

ஆற்றினில் மணல் என அடை பிறப்பில்

ஆற்றிய வினை அற அடை மனமே

கூற்றுவன் விழ உதை குரை-கழலான்

ஏற்றினில் வரும் இறை இடைமருதே.


āṭrinil maṇal ena aḍai piṟappil

āṭriya vinai aṟa aḍai manamē

kūṭruvan viḻa udai kurai-kaḻalān

ēṭrinil varum iṟai iḍaimarudē.


Siva kicked Yama and rides on a bull. O mind! Worship Siva dwelling in Thiruvidaimarudur and the karma accumulated over countless births (that are as many as sand in a riverbed) will be destroyed.


7)

பொரி-எரி என வரும் புலன்களுடன்

புரி-வினை பொசுங்கிடப் புகு மனமே

திரிகிற மதில்களைச் சிறு-நகையால்

எரி இறை உறை பதி இடைமருதே.


pori-eri ena varum pulangaḷuḍan

puri-vinai posuṅgiḍap pugu manamē

tirigiṟa madilgaḷaic ciṟu-nagaiyāl

eri iṟai uṟai padi iḍaimarudē.


Siva birth the three roaming forts with a smile. O mind! Worship Siva dwelling in Thiruvidaimarudur and troubles caused by the five senses and the karma will be burnt to ashes.


8)

புரி-குழல் கயல்-விழித் தெரிவையர்-பின்

திரிகிற நிலை கெடச் சேர் மனமே

அரி-அவன் அகழ்ந்தடி அடையகிலா

எரி என உயர் இறை இடைமருதே.


puri-kuḻal kayal-viḻit terivaiyar-pin

tirigiṟa nilai keḍac cēr manamē

ari-avan agaḻndaḍi aḍaiyagilā

eri ena uyar iṟai iḍaimarudē.


Siva is the infinite column of fire whose bottom could not be reached by Vishnu. O mind! Worship Siva dwelling in Thiruvidaimarudur and the sufferings caused by chasing sensual pleasures will cease.



9)

குமை-முனை வினை கெடக் குறைவிலதோர்

அமைதியும் நிலை-பெற அடை மனமே

தமை எரி விடம்-தனைத் தடுத்தருள

இமையவர் தொழும் இறை இடைமருதே.


kumai-munai vinai keḍak kuṟaiviladōr

amaidiyum nilai-peṟa aḍai manamē

tamai eri viḍam-tanait taḍuttaruḷa

imaiyavar toḻum iṟai iḍaimarudē.


Siva ate the deadly poison when Devas worshiped Him. O mind! Worship Siva dwelling in Thiruvidaimarudur to get rid of past karma and attain everlasting peace.


10)

அற-வழி அறிகிலர் அவர் மொழியும்

புற-வழி பொருள் அல அறி மனமே!

பிறவழி ஒரு வழி பிறை அணியும்

இறை-வழி என அடை இடைமருதே!


aṟa-vaḻi aṟigilar avar moḻiyum

puṟa-vaḻi poruḷ ala aṟi manamē!

piṟavaḻi oru vaḻi piṟai aṇiyum

iṟai-vaḻi ena aḍai iḍaimarudē!


O mind! Disregard the other paths mentioned by ignorant people who do not know the path of Dharma. Siva wears a crescent moon. The path of Siva is the is the path to get rid of future births. Worship Siva in Thiruvidaimarudu.


11)

கனை-கடல் அலை எனக் கடுத்து வரும்

வினை கெட அடைந்திட விரை மனமே

அனல் வடிவினில் அரி அயன் அறியார்

என வரும் இறை உறை இடைமருதே.


kanai-kaḍal alai enak kaḍuttu varum

vinai keḍa aḍaindiḍa virai manamē

anal vaḍivinil ari ayan aṟiyār

ena varum iṟai uṟai iḍaimarudē.


Siva stood as the column of fire that Brahma and Vishnu could not know. O mind! Hurry to worship Siva dwelling in Thiruvidaimarudur to get rid of past karma (that is powerful and never-ending like the waves of the sea).


V. Subramanian

====================

1 comment:

  1. very nice songs. kovilil pon ezuththukkaLal poRikkappada vendiyavai
    yogiyar

    ReplyDelete